விஜயும் அஜித்தும் சேர்ந்து நடிச்ச படம் நாளை ரிலீஸ்! ஆச்சர்யத்தில் ரசிகர்கள்

133
Advertisement

கோலிவுட் வட்டாரத்தின் முக்கிய சுவாரஸ்யமே விஜய் அஜித் போட்டி சூழல் என கூறும் அளவிற்கு ஆரம்ப காலத்தில் இருந்தே, அவர்கள் தமிழ் சினிமாவின் எதிரெதிர் துருவங்களாக பார்க்கப்பட்டு வருகின்றனர்.

விஜயும் அஜித்தும் தனிப்பட்ட விதத்தில் நட்புறவுடன் பழகி வந்தாலும், அவ்வப்போது அவர்களது ரசிகர்கள் சமூகவலைதளங்களில் வார்த்தை மற்றும் hashtag போர்களில் ஈடுபடுவது வழக்கம்.

தற்போதும், பொங்கலுக்கு நேரடியாக மோதும் விஜயின் ‘வாரிசு’ மற்றும் அஜித்தின் ‘துணிவு’ இருதரப்பு ரசிகர்களிடையே உச்சகட்ட எதிர்பார்ப்புகளை அதிகரித்து வருகின்றது.

இந்நிலையில், 1995ஆம் ஆண்டு விஜய் மற்றும் அஜித் இணைந்து நடித்த ‘ராஜாவின் பார்வையிலே’ திரைப்படம் ஜனவரி ஆறாம் தேதி re release செய்யப்பட உள்ளது.

ரசிகர்களிடையே உச்சகட்ட போட்டி மனப்பாண்மை நிலவி வரும் சூழ்நிலையில், இந்த re release எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.