இன்றும் இளமையுடன் இருக்கும்
METTA ROONGRAT
மறைந்த முதல்வர் எம்ஜிஆரே தயாரித்து இயக்கி
நடித்த படம் உலகம் சுற்றும் வாலிபன். 1973 ஆம்
ஆண்டில் வெளியானது இப்படம். அப்போது திமுக
ஆட்சியில் இருந்தது.
எம்ஜிஆரோ அப்போதுதான் திமுகவிலிருந்து விலகி
அதிமுகவைத் தொடங்கியிருந்தார். ஜப்பான், தாய்லாந்து,
ஹாங்காங், மலேசியா, சிங்கப்பூர், பிஜி எரிமலைத் தீவுகள்
போன்ற அயல்நாடுகளில் எடுக்கப்பட்ட முதல் தமிழ்ப்
படமான இந்தப் படத்தில் 10 பாடல்கள் இடம்பெற்றிருந்தன.
அவள் ஒரு நவசர நாடகம் ஆனந்தக் கவிதையின்
ஆலயம், பன்சாயி ஈஈஈஈ காதல் பறவைகள் பாடும்
கவிதைகள், லில்லி மலருக்கு கொண்டாட்டம் உன்னைப்
பார்த்தலிலே, நிலவு ஒரு பெண்ணாகி உலவுகின்ற அழகோ,
பச்சைக்கிளி முத்துச்சரம் முல்லைக்கொடி யாரோ,
சிரித்து வாழவேண்டும் பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே,
தங்கத் தோணியிலே தவழும் பெண்ணழகே, நமது
வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும் இப்படை
தோற்கின் எப்படை வெல்லும் போன்ற பாடல்கள்
சூப்பர்ஹிட்டாக அமைந்தன.
எம்ஜிஆரின் புகழ்பாடும் படங்களில் இதுவும் ஒன்று.
இந்தப் படத்தில் எம்ஜிஆருக்கு ஜோடியாக லதா, மஞ்சுளா,
சந்திரகலா, தாய்லாந்து நடிகை மேட்டா ரூங்ரத் என்று
நான்கு நாயகிகள்.
தன் கள்ளங்கபடமற்ற சிரிப்பால் ரசிகர்கர்களின்
உள்ளத்தைக் கவர்ந்தவர் மேட்டா ரூங்ரத். இந்தப் படம்
வெளியாகி 46 ஆண்டுகளாகும் நிலையில், அதில்
நடித்த ரூங்காத் தற்போதும் அதே புன்னகை தவழ
வாழ்ந்து வருகிறார். 72 வயதானாலும் அதே சிரிப்பு
இந்த தாய்லாந்து இளவரசிக்கு.