காஷ்மீரில் உள்ள பஹல்காம் சுற்றுலா தலத்தில் கடந்த 22-ந் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணிகள் உள்பட 26 பேர் பலியானார்கள். இதற்கு பதிலடி தரும் விதமாக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இதற்கிடையில், மத்திய உள்துறை அமைச்சகம் பிறப்பித்த உத்தரவை தொடர்ந்து, முறைப்படி இந்த வழக்கு விசாரணையை என்.ஐ.ஏ. கையில் எடுத்துக்கொண்டது.
இந்நிலையில் பஹல்காமில் தாக்குதல் நடத்துவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு தீவிரவாதிகள் காஷ்மீர் வனப்பகுதிக்குள் பதுங்கி இருந்து 4 இடங்களில் உளவு பார்த்து வந்ததாக என்.ஐ.ஏ. அதிர்ச்சி தகவல் அளித்துள்ளது. மேலும் சந்தேகிக்கப்படும் நபர்கள், சுற்றுலா கைடுகள், பஹல்காம் பகுதியில் வசிக்கும் மக்கள் என 100-க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.