தென்காசியில் பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக X தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், தென்காசி கடையநல்லூரில் நேர்ந்த பேருந்து விபத்தில் ஆறு பேர் உயிரிழந்த செய்தியறிந்து மிகவும் வேதனைக்குள்ளாகியிருக்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
மாவட்ட ஆட்சியரை அரசு மருத்துவமனைக்கு சென்று, பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு உயர்தர சிகிச்சை அளிக்கப்படுவதை உறுதி செய்ய உத்தரவிட்டுள்ளேன் என தெரிவித்துள்ளார். காயமடைந்துள்ளவர்கள் விரைந்து நலம்பெற அரசு துணை நிற்கும் என மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
