மிரட்டும்  டாடா மின்சார வாகனம்

521
Advertisement

சர்வதேச அளவில் எரிபொருள் விலையானது உச்சம் தொட்டு வரும் நிலையில், இதற்கு ஏதேனும் மாற்றம் வந்து விடாதா? எண்ற பலத்த எதிர்பார்ப்பு நிலவி வருகின்றது.

இதன் காரணமாகவே எரிபொருளுக்கு மாற்றாக மின்சார வாகனம் உற்பத்தியை முன்னெடுத்து வருகிறது பல வாகன நிறுவனங்கள்.

இந்தியாவின் பல நிறுவனங்களும் ஏற்கனவே உற்பத்தி செய்து வரும் நிலையில், டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அதன் புதிய மின்சார காரினை இன்று அறிமுகம் செய்துள்ளது.டாடாவின் இந்த மின்சார வாகனத்திற்கு “அவின்யா” என பெயரிடப்பட்டுள்ளது.சமஸ்கிருத மொழியில் இருந்து உருவானது அவின்யா என்ற பெயர். இது புதுமை என்று பொருள் ஆகும். பெயருக்கு ஏற்ப பல புதுமைகளுடன் இந்த வாகனம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இது அடுத்த தலைமுறையின் மின்சார வாகங்களை நோக்கிய முன்னேற்றமாகும். இந்த வாகனம் ஜென் 3 கட்டமைப்பினை கொண்டது என பெருமைபட தெரிவித்துள்ளது அந்நிறுவனம்.இது குறித்து டாடா குழுமத்தின் தலைவர் என் சந்திரசேகரன்  கூறுகையில் ,உலகளாவிய ரீதியில் எங்களது வாகனங்கள் சிறந்ததாக இருக்க வேண்டும்.குறிப்பாக எதிர்கால தேவைகளுக்கு ஏற்ப டெக்னாலஜியினை உட்புகுத்தவும் திட்டமிட்டுள்ளது என்றார்.

தற்போதைய தலைமுறையை கவரும் விதம்,புதிய தொழில்நுட்பத்துடன் பல அம்சங்களுடன் கண்னை கவரும் ஒரு வாகனமாக டாடா அவின்யா அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.