Sunday, August 3, 2025
HTML tutorial

மாட்டின் சிறுநீர் என்பது அமிர்த நீர் : தமிழிசை சௌந்தரராஜன் கொடுத்த விளக்கம்

சென்னை ஐஐடி இயக்குனர் காமகோடி சமீபத்தில் நடந்த ஒரு விழாவில் கோமியம் குடித்தால் காய்ச்சல் உள்பட பல நோய்கள் குணப்படுத்த முடியும் என கூறியது சர்சையை ஏற்படுத்தியது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் சென்னை நுங்கம்பாக்கத்தில் புத்தக வெளியீட்டு விழாவில் பா.ஜ.க. மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பேசியதாவது:

கோமியம் குடித்தால் டாஸ்மாக் விற்பனை குறைந்து விடும் என நினைக்கிறார்கள். மாட்டுக்கறியை சாப்பிடுவர், மாட்டு சாணத்தை பயன்படுத்துவர். மாட்டின் கோமியம் மருந்து என்றால் எதிர்க்கிறார்கள்.

விஞ்ஞான பூர்வமாக ஆய்வு செய்து ஆயுர்வேதத்தில் கோமியம் மருந்து என்று கூறப்பட்டுள்ள நிலையில் கோமியத்தை பயன்படுத்தக் கூடாது என்று பேசுகிறார்கள்.

மாட்டின் சிறுநீர் என்பது அமிர்த நீர். மாட்டுச் சாணத்தில் கிருமி நாசினி உள்ளது என்றால், மாட்டு சிறுநீரிலும் கிருமிநாசினி உள்ளதை ஏன் ஏற்றுக் கொள்ள மறுக்கிறார்கள் என அவர் பேசியுள்ளார்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
HTML tutorial
Latest News