எக்காரணத்தை கொண்டும் ஆசிரியர்களை தமிழ்நாடு அரசு கைவிடாது என்று அமைச்சர் அன்பில்மகேஷ் தெரிவித்துள்ளார்.
திருச்சியில் தரம் உயர்த்தப்பட்ட மேல்நிலைப் பள்ளியை, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் இன்று திறந்துவைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், டெட் தேர்வு தொடர்பாக உச்சநீதிமன்ற தீர்ப்பு முழுமையாக வந்தவுடன் சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு மேல்முறையீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். எக்காரணத்தைக் கொண்டும் தமிழ்நாடு அரசு ஆசிரியர்களை கைவிடாது என்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார்.