தமிழகத்தில் பல்வேறு இடங்களில் உள்ள பழைய காற்றாலைகளை அகற்றிவிட்டு, அங்கு, ‘ஹைபிரிட்’ முறையில், பொது – தனியார் பங்கேற்பு வாயிலாக, காற்றாலையுடன், சூரியசக்தி மின் நிலையங்களையும் சேர்த்து அமைக்க மின் வாரியம் முடிவு செய்து உள்ளது.
பழைய காற்றாலை அமைந்துள்ள இடங்களில் தற்போது, 22 மெகா வாட் திறனில் காற்றாலை மற்றும், 18 மெகா வாட் திறனில் சூரியசக்தி மின் நிலையங்களை, ‘பி.பி.பி.,’ எனப்படும் பொது – தனியார் கூட்டு பங்கேற்பின் வாயிலாக அமைக்க, மின் வாரிய இயக்குனர்கள் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, அரசிடம் அனுமதி பெறப்பட உள்ளது. இதனையடுத்து பழைய காற்றாலைகளை அகற்றப்பட்டு, புதிய காற்றாலைகள் அமைக்கப்பட உள்ளது.