முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளது. இதில் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அனைத்து அமைச்சர்களும் பங்கேற்க உள்ளனர். சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று காலை 11 மணிக்கு நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில், 2025-2026-ஆம் நிதியாண்டுக்கான தமிழ்நாடு பட்ஜெட்டில் இடம்பெறும் முக்கிய திட்டங்கள் குறித்து விவாதிக்க வாய்ப்புள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற சந்திரகுமார் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெறவுள்ளார். பின்னர், சபாநாயகர் அறையில் சட்டப்பேரவை உறுப்பினராக சந்திரகுமார் பதவியேற்றுக் கொள்ளவுள்ளார்.