தமிழ் மொழி தெரியாத காரணத்தால் தன்னை பணியில் இருந்த நீக்கியதாக, தேனியைச் சேர்ந்த ஜெயக்குமார் என்பவர் 2022ம் ஆண்டு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், தமிழக அரசுப் பணியில் ஒருவர் பணிபுரிய வேண்டும் என்றால். அவருக்கு கண்டிப்பாக தமிழ் மொழி, பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.
தமிழக அரசுப் பணியாளருக்கு தமிழ் தெரியாது என்றால், அவர் எப்படி அன்றாட பணிகளை மேற்கொள்ள முடியும் என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதனையடுத்து குறிப்பிட்ட கால அளவிற்குள், மாநில அரசு சார்பில் நடத்தப்படும் மொழித் தேர்வில் வெற்றிபெற வேண்டும்.
மாநில அரசின் அலுவலக மொழி தெரியவில்லை எனில், பொதுப்பணிக்கு ஏன் வருகிறீர்கள்? என்றும் கேள்வி எழுப்பினர். இதனைத் தொடர்ந்து வழக்கு விசாரணையை இறுதி வாதங்களுக்காக நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.