உற்சாகத்தில் ரயில் பயணிகள்!

649
Advertisement

சென்னை முழுவதும் பொதுப் போக்குவரத்துக்கு மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

அதில்  கடற்கரை-தாம்பரம் வரை இயக்கப்பட்டு வரும் மின்சார ரயில்கள்  செங்கல்பட்டு வரை நீட்டிக்க ரயில் பாதைகள் அமைக்கப்பட்டு வந்தன.  

தாம்பரம்-செங்கல்பட்டு மார்க்கத்தில் சுமார் 30 கி.மீ. தூரத்துக்கு இந்த 3வது பாதை அமைக்கப்பட்டுள்ளது.

அடுத்த கட்டமாக கூடுவாஞ்சேரி-சிங்கப்பெருமாள் கோவில் இடையே 11.07 கி.மீ தூரத்துக்கு  ரயில் பாதை அமைக்கப்பட்டு வருகிறது.

 இந்த பாதையில்  கடந்த சில மாதங்களுக்கு முன்பு சோதனை ஓட்டமும் நடத்தி முடிக்கப்பட்டது.

இந்நிலையில் சென்னை கடற்கரை-செங்கல்பட்டு இடையே மாலை 4.30 மணிக்கு  மின்சார ரயில் இயக்கப்பட்டது.

இதன் பிறகு அதிகாரிகள் இன்னும் ஓரிரு நாட்களில்  தாம்பரத்தில் இருந்து 3வது வழித்தடத்தில் ரயில்கள் இயக்கப்படும்.

முழுமையாக இந்த பாதை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் எனத் தெரிவித்துள்ளனர்.