1995-ம் ஆண்டில் ஹசாரா இனத்தின் தலைவராக இருந்த அப்துல் அலி மஸாரியை தலிபான்கள் தூக்கிலிட்டனர்.
இதனையடுத்து, பாமியான் மக்கள் அப்துல் அலியின் மிகப்பெரிய சிலையை அங்கு நிறுவினர்.
இதனால் ஆத்திரமடைந்த தாலிபான்கள் ஹசாரா இன மக்களை தொடர்ந்து துன்புறுத்தி வந்தனர்.
கடந்த முறை தாலிபான்கள் ஆப்கனைக் கைப்பற்றியபோது, பாமியானில் இருந்த நூற்றாண்டுகள் பழமையான புத்தர் சிலைகளை வெடிவைத்து தகர்த்து அழித்தனர்.
இந்நிலையில் தற்போது ஆப்கானிஸ்தான் முழுவதும் தாலிபான்கள் வசம் வந்துள்ளதால், ஹசாராக்கள் மீதான அடக்குமுறையை தாலிபான்கள் மீண்டும் தொடங்கிவிட்டனர்.
முதல்கட்டமாக ஹசாரா இனத் தலைவர் அப்துல் அலியின் சிலையை தகர்த்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.