Thursday, May 22, 2025

”கப்பை எடுத்து வைங்கப்பா” RCBக்கு ‘பறந்துவந்த’ NZ வீரர்

இந்த 2025ம் ஆண்டு IPL தொடரில் பல்வேறு அதிசயங்கள் நிகழ்நது வருகின்றன. ஒருபுறம் தொடரில் இருந்து முதல் அணியாக வெளியேறி சென்னை மோசமான சாதனை படைக்க, மறுபுறம் பஞ்சாப், பெங்களூரு அணிகள் Play Off வாய்ப்பினை உறுதி செய்து Surprise கொடுத்துள்ளன.

என்றாலும் போர் பதற்றத்தால் நிறுத்தி வைக்கப்பட்ட IPL தொடர், மீண்டும் ஆரம்பித்த நேரம் சரியில்லை போல. ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா வீரர்கள் சொந்த நாடு தான் முக்கியம் என்று டாட்டா காட்டி சென்று விட்டனர்.

இதனால் அவர்களுக்கு மாற்றான புதிய வீரர்களை, ஒவ்வொரு அணியும் வலைவீசித் தேடி வருகின்றன. இந்தநிலையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின், 21 வயது இங்கிலாந்து வீரர் Jacob Bethell தொடரில் இருந்து விலகியுள்ளார்.

அவருக்குப் பதிலாக 30 வயது நியூசிலாந்து வீரர் Tim Seifertஐ, பெங்களூரு அணி ரூபாய் 2 கோடிக்கு ஒப்பந்தம் செய்துள்ளது. விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான Seifert, இதுவரை 262 T20 போட்டிகளில் விளையாடி 5862 ரன்களைக் குவித்துள்ளார்.

T20 யில் அவரின் ஸ்ட்ரைக் ரேட் 133 ஆக உள்ளது. தற்போது பாகிஸ்தானின் PSL தொடரில் Tim Seifert விளையாடி வருகிறார். எனவே RCBக்காக Play Off போட்டியில் தான் அவர் விளையாடுவார் என தெரிகிறது. T20 தொடரில் நல்ல அனுபவம் இருப்பதால், RCB வெற்றிக்கு Tim Seifert மிகவும் உறுதுணையாக இருப்பார் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

Latest news