Monday, February 10, 2025

கடன் வாங்கி ஆன்லைனில் விளையாட்டு : மொத்த பணமும் போனதால் தற்கொலை

மதுரை அருகே கோவில் பாப்பாக்குடி, வடக்கு தெருவை சேர்ந்தவர் சின்னசாமி மகன் சரவணன் 38. இவர் ஆன்லைன் ரம்மி விளையாட்டிற்கு அடிமையானவர். ஆன்லைனில் விளையாடுவதற்காக கடன் வாங்கி தொடர்ந்து விளையாடிக் கொண்டிருந்தார். அனைத்திலும் தோல்வியடைந்து நஷ்டம் அடைந்தார்.

பணத்தை இழந்ததால் மனமுடைந்த அவர் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து அவருடைய தம்பி காளீஸ்வரன் அலங்காநல்லூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Latest news