Saturday, July 12, 2025

விமான விபத்தில் பலியான செவிலியர் பற்றி அநாகரிக கருத்து.., வட்டாட்சியர் பணியிடை நீக்கம்

அகமதாபாத்தில் நேற்று நடந்த விமான விபத்தில் 241 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த விபத்தில் கேரளாவை சேர்ந்த செலிவியார் ரஞ்சிதா உயிரிழந்தார்.

இந்நிலையில் ரஞ்சிதாவின் மரணத்தை விமர்சித்த வெள்ளரிக்குண்டு துணை வட்டாட்சியர் பவித்ரன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

விமான விபத்தில் பலியான ரஞ்சிதா குறித்து முகநூல் பதிவில், “ரஞ்சிதாவுக்கு மாநில அரசு வேலை கொடுத்தது. ஆனால், அவர் வெளிநாட்டுக்கு சென்றார். அதற்கான பலனையும் அவர் அடைந்து விட்டார்” என்று பவித்ரன் கருத்து தெரிவித்தார்.

அவருடைய இந்த அநாகரிக கருத்துக்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து அவரை பணியிடை நீக்கம் செய்து காசர்கோடு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news