குஜராத் மாநிலம் சூரத்தில் இருந்து ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூருக்கு புறப்பட இருந்த இண்டிகோ விமானத்தின் கதவு அருகே ஒரு பெரிய தேனீக்கள் கூட்டம் கூடியது.
முதலில் விமான நிலைய ஊழியர்கள் புகை பயன்படுத்தி தேனீக்களை விரட்ட முயற்சித்தனர். ஆனால் அது வெற்றியளிக்காததால், தீயணைப்பு வீரர்கள் அழைக்கப்பட்டனர். அவர்கள் தண்ணீர் தெளித்து தேனீக்களை விரட்டினர். பின்னர் விமானம் பாதுகாப்பாக புறப்பட்டது.
இதன் காரணமாக மாலை 4.20 மணிக்கு புறப்பட வேண்டிய விமானம், 5.26 மணிக்கு புறப்பட்டது.