தமிழக ஆளுநரின் செயல்பாட்டிற்கு எதிராக உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு, அனைத்து மாநில ஆளுநர்களுக்கும் எச்சரிக்கை பாடம் என்று கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு, அனைத்து மாநில ஆளுநர்கள் மற்றும் அவர்களை பின்னால் இருந்து இயக்கி வரும் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசுக்கு எச்சரிக்கை பாடம் என்று தெரிவித்துள்ளார்.
மாநில அரசால் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு மூன்று மாதங்களுக்குள் கையெழுத்து போட வேண்டும் என்ற காலகெடுவை உச்சநீதிமன்றம் விதித்துள்ளதின் மூலம், இதுவரை இருந்த குழப்பங்களை உச்ச நீதிமன்றம் நீக்கி வழிகாட்டியுள்ளது என்று முதலமைச்சர் சித்தராமையா கூறியுள்ளார்.