Wednesday, January 21, 2026

பூவை ஜெகன்மூர்த்திக்கு முன்ஜாமீன் வழங்கியது உச்சநீதிமன்றம்

திருவள்ளூர் மாவட்டத்தில் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் புரட்சி பாரதம் கட்சித் தலைவரும், சட்டப்பேரவை உறுப்பினருமான பூவை ஜெகன்மூர்த்திக்கு உச்ச நீதிமன்றம் முன் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 27ஆம் தேதி, சென்னை உயா் நீதிமன்றத்தில், ஜெகன் மூா்த்தியின் முன் ஜாமீன் கோரும் மனு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது ஜெகன்மூா்த்தி தாக்கல் செய்த முன்ஜாமீன் கோரும் மனுவைத் தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டாா்.

இதையடுத்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இவ்வழக்கு விசாரணை இன்று (ஜூன் 30) உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற நிலையில் பூவை ஜெகன்மூர்த்திக்கு முன் ஜாமீன் வழங்கி நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

Related News

Latest News