இரத்த சக்கரை அளவை குறைக்கும் 8 உணவுகள்

301
Advertisement

கட்டுப்படுத்தப்படாத இரத்த சக்கரை அளவுகள் பல உடல் உபாதைகளுக்கு வழி வகுக்கின்றன.

மேம்பட்ட உடல்நலனுக்கு, சக்கரை அளவுகளை சீராக பராமரிப்பது அவசியம்.

ஒரு சராசரி மனிதன் சில மணி நேரங்கள் சாப்பிடாமல் இருக்கும் போது சக்கரை அளவு நூறுக்கு குறைவாகவும், உணவு சாப்பிட்டு இரண்டு மணி நேரத்துக்கு பின் 140க்கு குறைவாகவும் இருக்க வேண்டும்.

நாம் சாப்பிடும் உணவுகள் நேரடியாக இரத்த சக்கரை அளவின் மீது தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் சரியான உணவுகளை தேர்வு செய்து உட்கொள்ளும்போது சக்கரை அளவுகளை கட்டுப்படுத்துவது சாத்தியமாகிறது.

சாதாரணமாக சமையலுக்கு பயன்படுத்தும் பட்டையில், உடலில் உள்ள Body Mass Indexஐ குறைக்கும் ஆற்றல் உள்ளது. பல்வேறு சத்துக்களையும் கொண்டுள்ள பட்டை, கொழுப்பை குறைப்பதோடு சக்கரை அளவுகளையும் குறைக்கிறது.

Flavonoids என்ற Antioxidantகள் அதிகம் நிறைந்துள்ள வெண்டைக்காய் இதய ஆரோக்கியத்துக்கு உதவுவதோடு, அதிலுள்ள Polysacharaides என்ற உட்பொருள் இரத்த சக்கரை அளவை குறைப்பது ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.

ப்ரோபையோட்டிக்ஸ் (Probiotics) அதிகம் உள்ள யோகர்ட் (Yoghurt) சக்கரை நோயாளிகள் சாப்பிட சிறந்த உணவாக பார்க்கப்படுகிறது.

நார்ச்சத்து மிகுந்த பருப்பு வகைகள் செரிமானம் ஆகும் வேகத்தை குறைப்பதால், சீக்கிரமே பசி எடுக்கும் சூழல் தவிர்க்கப்படுகிறது. தேவையான உணவுகளை மட்டுமே சாப்பிடுவதால் சக்கரை அளவும் ஏறாமல் இருக்கும்.

ஓட்ஸ், கினோவா, கோதுமை மற்றும் முழு தானியங்கள், நட்ஸ் வகைகள், முட்டை போன்றவற்றை உணவில் சேர்த்துக்கொள்ளுவதும் முறையான உடற்பயிற்சி செய்வதும் இரத்த சக்கரை அளவை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதோடு பொதுவான ஆரோக்கியத்தையும் உறுதி செய்யும் என உணவியல் நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.