Tuesday, June 24, 2025

பெட்ரோல் விலை உயர்வை சமாளிக்க சன்னி லியோன் சொன்ன யோசனை

https://www.instagram.com/p/CRDZYtCjdrP/?utm_source=ig_web_copy_link

பெட்ரோல் விலை நாளுக்கு நாள் உயர்ந்துகொண்டே இருக்கிறது.

விலை உயர்வு விண்ணைத் தொட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
விண்ணைத் தாண்டிப் போனாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

இந்த பெட்ரோல் விலை உயர்வை சமாளிக்கப் புதுவிதமான
யோசனை ஒன்றைச் சொல்லியுள்ளார் கவர்ச்சிக் கன்னி சன்னி லியோன்.

அது என்னன்னா…

பெட்ரோல் விலை உயர்வைப் பத்திக் கவலைப்படாதீங்க…
எல்லாரும் சைக்கிள் ஓட்டிப் பழகுங்க. உடம்பு சிலிம்மாயிடும்னு
ரொம்ப அக்கறையா சொல்லியிருக்காங்க…

பாத்தீங்களா…. ஒரே கல்லுல ரெண்டு மாங்கா அடிச்சிட்டாங்க
இந்த கவர்ச்சிக் கன்னி…

பெட்ரோல் விலை உயர்வையும் சமாளிக்கலாம். உடம்பையும் பிட்டா
வைச்சுக்கலாம்.

பீட்டா அமைப்பில் சன்னிலியோனின் சிறந்த செயல்பாடுகளுக்காக
2017 ஆம் ஆண்டின் சிறந்த நபர் என்ற விருதை பீட்டா அமைப்பு சன்னி
லியோனுக்குக் கொடுத்துத் தன்னைக் கௌரவப்படுத்திக்கொண்டது.
சில ஆண்டுகளுக்கு முன்பு கூகுளில் அதிகம் தேடப்பட்டவர் இந்தக் கவர்ச்சிக்
கன்னிதானாம். இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தை கிட்டத்தட்ட 50 லட்சம்
ரசிகர்கள் பின்தொடர்கிறார்கள்.

ஆகவே, ரசிகக் கண்மணிகளே…
பெட்ரோல் விலை உயர்வைப் பற்றிக் கவலைப்பட்டுக் கண்ணீர்
வடிக்காமல் சைக்கிள் ஓட்டுங்க…ஓட்டத் தெரியாதவங்க சைக்கிள
உருட்டிக்கிட்டே போங்க

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news