சின்னச்சின்ன ஆசை பாடலைத் தமிழில் பாடிய
3 வயது பெங்காலி சிறுமி

238
Advertisement

https://www.instagram.com/tv/CR8h6a6lBEo/?utm_source=ig_web_copy_link

‘ரோஜா’ படத்தில் இடம்பெற்ற சின்னச்சின்ன ஆசை பாடலை
பெங்காலி மொழிச் சிறுமி இந்தி மொழியிலும் தமிழ் மொழியிலும்
3 நிமிடங்கள் பாடி அசத்தியுள்ளார்.

வாயால் இசைத்தபடியே இரண்டு மொழிகளிலும் பாடி
கேட்போரை சிறகடிக்க வைத்துள்ளார்.

இந்தச் சிறுமி பாடுவதை ஏஆர் ரஹ்மான் தனது இன்ஸ்டாகிராம்
பக்கத்தில் பதிவிட்டு வாழ்த்தியுள்ளார். இவரைப்போல் பல
இசையமைப்பாளர்களும், பாடகர்களும் சிறுமியின் திறமையை
வியந்து பாராட்டியுள்ளனர்.

1992ல் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘ரோஜா’ திரைப்படம்
மூலம் இசையமைப்பாளர் ஆனார் ஏ.ஆர்.ரஹ்மான். இப்படத்திற்கு
வைரமுத்து எழுதிய 6 பாடல்களுள் ‘சின்னச்சின்ன ஆசை சிறகடிக்க ஆசை’
என்ற பாடல் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தது.

பாடல் வெளியானபோது அனைத்துத் தரப்பு ரசிகர்களும் ‘சின்னச்சின்ன ஆசை’ப்
பாடலை வெகுவாக ரசித்தனர். இப்போது கேட்டாலும் மெய் மறந்து ரசிக்கச்
செய்யும் இந்தப் பாடலைக் கேட்போர் நிச்சயம் தங்கள் கவலைகளையும்
மறந்து புத்துணர்வு பெறுவர்.

இந்தப் படத்துக்கு இசை அமைத்ததற்காக ஏ.ஆர்.ரஹ்மானுக்குத்
தேசியத் திரைப்பட விருதும், தமிழக அரசு திரைப்பட விருதும்,
தென்னிந்தியத் திரைப்பட பிலிம்ஃபேர் விருதும் கிடைத்தன.

இந்த மெல்லிசைப் பாடலை பெங்காலி மொழிச் சிறுமி இந்தி, தமிழ்
என இரண்டு மொழிகளிலும் அச்சுப் பிசகாமல் பாடித் இந்தியத்
திரையுலகையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளார்.