ஆட்டோ டிரைவருக்கு வந்த திடீர் அதிர்ஷ்டம்

210
Advertisement

ஆட்டோ டிரைவர் ஒருவருக்கு லாட்டரிச் சீட்டில்
12 கோடி ரூபாய் பரிசு கிடைத்துள்ளது.

கேரள மாநிலம், கொச்சி நகரிலுள்ள மரடு பகுதியைச் சேர்ந்த
பி.ஆர். ஜெயபாலன் தான் இந்த திடீர் அதிர்ஷ்டசாலி. 2021 ஆம் ஆண்டு
ஓணம் பண்டிகையையொட்டி வெளியிடப்பட்ட 12 கோடி ரூபாய் பரிசுத்
தொகைக்கான 300 ரூபாய் சீட்டை வாங்கினார்.

அந்தப் பரிசுத் தொகைக்கான அதிர்ஷ்டக் குலுக்கல் முடிவில்
ஜெயபாலன் வாங்கியிருந்த லாட்டரிச் சீட்டுக்கு முதல் பரிசு கிடைத்தது.
அதற்கான தொகை ரூபாய் 12 கோடி. இந்தப் பரிசுத் தொகையில்
வரிப் பிடித்தம் போக ஜெயபாலனுக்கு 7 கோடியே 40 லட்ச ரூபாய் கிடைக்கும்.

Advertisement

இந்தப் பரிசுத் தொகையைக்கொண்டு எனது முழுக்கடன்களையும்
அடைத்துவிடுவேன். எனது குழந்தைகளுக்கு நல்ல கல்வி கிடைக்கச்
செய்வேன். எனது சகோதரிகளுக்கும் இந்தப் பணத்தைக் கொடுப்பேன் என
மகிழ்ச்சி பொங்கக் கூறுகிறார் ஆட்டோ டிரைவரான ஜெயபாலன்.

ஜெயபாலனின் மனைவி துப்புறவுத் தொழிலாளியாகப் பணிபுரிகிறார்.
ஒரு மகன் எலக்ட்ரீஷியனாகவும் மற்றொரு மகன் ஹோமியோபதி
மருத்துவராகவும் உள்ளார்.
58 வயதாகும் ஜெயபாலன் ரெகுலராக லாட்டரிச்சீட்டு வாங்கும்
வழக்கம் உள்ளவர். அண்மையில் அவர் வாங்கிய பரிசுக் சீட்டுக்கு
5 ஆயிரம் ரூபாய் கிடைத்தது. இந்த முறை பம்பர் பரிசு கிடைத்ததில்
பேரானந்தத்தில் திளைத்து வருகிறார்.