பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதன் காரணமாக தற்போது இந்தியா – பாகிஸ்தான் உறவில் விரிசல் அதிகமாகி உள்ளது. எல்லைப் பகுதிகளில் பதற்றம் நிலவி வருகிறது.

இந்த சூழலில், பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி வெளியிட்டுள்ள பதிவு ஒன்றில் “மோடி எதுவும் செய்ய மாட்டார். பீகார் சென்று உரையாற்றுவதற்கு பதிலாக அவர் காஷ்மீருக்குச் சென்றிருக்க வேண்டும். இப்போது நாம் நம்பிக்கை இழந்து இதை கடந்த சென்றுவிடுவோம். விஷயம் முடிந்துவிட்டது. மோடி, ‘அங்கே ஒன்றுமே நடக்கவில்லை’ என்று சொல்லி உங்களைத் தூங்க வைத்துவிடுவார்” என குறிப்பிட்டுள்ளார்.