இந்திய விண்வெளி வீரா் சுபான்ஷு சுக்லா மற்றும் ‘ஆக்ஸியம்-4’ விண்வெளி திட்டத்தின் கீழ் சென்ற 3 விண்வெளி வீரா்களும் சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து பூமிக்கு திரும்பினர்.
சுபான்ஷு சுக்லாவை அழைத்து வந்த டிராகன் விண்கலம், பத்திரமாக கடலில் இறங்கியதை நேரலையில் பார்த்த அவரது பெற்றோர் ஆனந்தக் கண்ணீர் விட்டனர். நால்வரும் பத்திரமாக இருப்பதாக நாசாவும் அறிவித்துள்ளது.