சென்னை கொட்டிவாக்கத்தில் மேல்நிலைப்பள்ளியில் தேங்கி நிற்கும் மழை நீரால் மாணவர்கள் அவதியடைந்துள்ளனர்.
சென்னை ஓ.எம்.ஆர்.சாலை, கொட்டிவாக்கத்தில் ஒய்.எம்.சி.ஏ சிறார் நகர் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது, அரசு உதவியுடன் செயல்படும் இப்பள்ளியில் 1000க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர்.
இந்தநிலையில், கனமழை காரணமாக பள்ளி வளாகத்தில் மழைநீர் தேங்கி நின்றது. இதனால் மாணவர்கள் கடும் அவதியடைந்தனர். இதையடுத்து, மோட்டார் மூலமாக மழைநீர் அப்புறப்படுத்தப்பட்டது.
