Friday, December 27, 2024

அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை – ஒருவர் கைது

சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழகத்தில் படித்து வரும் ஒரு மாணவரும், மாணவியும் காதலித்து வருவதாக கூறப்படுகிறது.  நேற்று பல்கலைக்கழக வளாகத்தில் இருவரும் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத இரண்டு பேர் மாணவனை தாக்கிவிட்டு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்து கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகாரின் பெயரில் விசாரணை நடத்தி வரும் போலீசார் இந்த சம்பவத்தில் ஒருவரை கைது செய்துள்ளனர்.

Latest news