மனிதனாக இருக்க விரும்பாதவர் செய்த விநோத செயல்

180
Advertisement

மனிதனாக இருக்க விரும்பாமல் தனது முகத்தை மாற்றியுள்ள இளைஞரின் புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது.

ஜெர்மனியைச் சேர்ந்த 28 வயதான இளைஞர் ஒருவர் இதுதொடர்பான தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அந்த புகைப்படங்களில் இளைஞர் தனது முகத்தில் பல வண்ணத்தில் புதிர் போட்டிகளிலுள்ள கட்டங்கள் போன்று பச்சைக் குத்தியுள்ளார்.

Advertisement

அத்துடன் காது, மூக்குகளில் துவாரமிட்டு அணிகலன்கள் அணிந்துள்ளார். கண்களுக்கு சாயம், இரண்டு பல் வரிசைகளிலும் டைட்டானியம் பூச்சு என்று தோற்றத்தை மாற்றிக்காட்ட முயன்றுள்ள அந்த இளைஞர் தனது நாக்கையும் பாம்பின் நாக்குபோல பிளவு பட்டதாக ஆக்கியுள்ளார்.

நான் விரும்பிய படியே என் உடலை மாற்ற முடியும். என் உடலைத் தனித்துவம் மிக்கதாக மாற்ற விரும்பினேன் என்று கூறியுள்ளார் இந்த விசித்திர இளைஞர்.

ஜெர்மன் இளைஞரின் இந்த விசித்திர எண்ணங்களைக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர் நெட்டிசன்கள்.