தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்தே, தமிழகத்தில் நல்ல மழை பெய்து வருகிறது. குறிப்பாக குறிப்பாக, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட தென் மாவட்டங்களிலும், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
இந்த நிலையில், தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது எக்ஸ் தளத்தில் முக்கிய தகவலை பகிர்ந்துள்ளார். கடலூர், டெல்டா மாவட்டங்கள் முதல் தென் தமிழகம் வரை நல்ல மழை பெய்யும். திருநெல்வேலி மாவட்டம் மாஞ்சோலை பகுதிகளில் கடந்த 4 நாட்களாக நல்ல மழை பெய்து வருகிறது.
வங்கக் கடலில் புயல் உருவாகி வருகிறது. நவம்பர் 26ஆம் தேதி புயலாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் மட்டுமே இன்னும் பெரிய அளவில் மழை பொழிவு இல்லை. எனவே, இந்த புயல் சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களுக்கு முக்கிய காலமாக இருக்கும். இந்த புயலால் வட மாவட்டங்களில் நல்ல மழை பெய்யலாம்” என்றார்.
