சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் ஞானசேகரன் கைது செய்யப்பட்டார். நேற்று 7 திருட்டு வழக்குகள் தொடர்பாக ஞானசேகரனை போலீசார் கைது செய்து பள்ளிக்கரணை போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் பள்ளிக்கரணை பகுதியில் 7 வீடுகளில் கைவரிசை காட்டியதை ஞானசேகரன் ஒப்புக்கொண்டுள்ளார். பல்வேறு பகுதிகளில் அவர் திருடி விற்ற 100 சவரன் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. திருடிய நகைகளை விற்று அந்த பணத்தில் சொகுசுகார் வாங்கியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.