Tuesday, June 24, 2025

நட்சத்திர Bowler ‘விலகல்’ RCBயின் அடுத்த தரமான ‘சம்பவம்’

IPL தொடரில் Play Off வாய்ப்பினை, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி உறுதி செய்து விட்டது. இதனால் இனி நடக்கும் போட்டிகள் அந்த அணிக்கு Warm Up மேட்சாகவே இருக்கும். RCB வருகின்ற மே 23ம் தேதி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியையும், மே 27ம் தேதி நடைபெறும் கடைசி போட்டியில் லக்னோ அணியையும் எதிர்கொள்கிறது.

இதற்கிடையில் அந்த அணியின் நட்சத்திர பவுலர் லுங்கி நிகிடி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்பதற்காக IPL தொடரில் இருந்து விலகியிருக்கிறார். இந்தநிலையில் லுங்கிக்கு மாற்றாக வெஸ்ட் இண்டீஸ் பவுலர் Blessing Muzarabaniஐ, ரூபாய் 75 லட்சத்துக்கு RCB ஒப்பந்தம் செய்துள்ளது.

வெஸ்ட் இண்டீஸின் நட்சத்திர பவுலர்களில் ஒருவரான Muzarabani, நிச்சயம் லுங்கி நிகிடியின் இடத்தை நிரப்புவார் என எதிர்பார்க்கப் படுகிறது. முன்னதாக தாயகம் திரும்பிய ஆஸ்திரேலிய பவுலர் Josh Hazlewoodஐ, பேச்சுவார்த்தை நடத்தி மீண்டும் RCBகுத் திரும்புமாறு, அணி நிர்வாகம் கேட்டுக் கொண்டது.

இதற்கு அவருக்கு ஒப்புக்கொண்டுள்ளதால், Play Off போட்டியில் Hazlewood பெங்களூரு அணிக்காக விளையாடுவது உறுதியாகியுள்ளது. அவர் விரைவில் அணியுடன் இணையவிருக்கிறார். மற்ற அணிகளை போல ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா வீரர்களை நம்பி RCB இல்லை என்பதால், நிச்சயம் அந்த அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துள்ளனர்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news