ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி – இந்தியா – தென் கொரியா இன்று பலப்பரீட்சை

384

இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தாவில் நடைபெற்று வரும் ஆசிய கோப்பை ஹாக்கிப் போட்டில் இன்று இந்தியா – தென் கொரிய அணிகள் மோதுகின்றன.

புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் தென்கொரியாவும் இரண்டாவது இடத்தில் இருக்கும் இந்தியாவும் மோதுவதால் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது என ரசிகர்கள் கருதுகின்றனர்.

சூப்பர் 4 சுற்றில் ஏற்கனவே ஜப்பானுக்கு எதிராக வெற்றியும் மலேசியாவுடன் டிரா செய்தும் இந்திய அணி வலுவான நிலையில் இருந்த போதும் இன்றைய போட்டி நடைபெறுகிறது.

இன்றைய போட்டியில் இந்தியா வெற்றி பெறும் பட்சத்தில் நேரடியாக பைனலுக்கு முன்னேறும்.

மாறாக டிரா ஆனால் மலேசியா-ஜப்பான் அணிகளுக்கிடையேயான ஆட்டத்தின் முடிவு முக்கியத்துவம் பெறும்.

எனினும் இந்திய அணி இறுதிச் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பு இருப்பதாகவே கருதப்படுகிறது.