சன் கிளாஸ் அணிந்து பியானோ வாசிக்கும் சிலந்திப் பூச்சி

349
Advertisement

சன் கிளாஸ் அணிந்து பியானோ வாசிப்பது போன்ற சிலந்திப் பூச்சியின் வீடியோ சமூக வலைத்தளவாசிகளை மகிழ்வித்து வருகிறது.

சிலந்தி என்றதும் சிக்கலான வலையை சுலபமாகவும் விரைவாகவும் பின்னும் காட்சிதான் நம் கண்முன்னே நிழலாடும். ஆனால், இந்த வீடியோவில் காணும் சிலந்தியின் செயல் காண்போரை சந்தோஷமடையச் செய்கிறது.

பியோனோ இல்லாமலேயே அதை வாசிப்பது போன்ற சிலந்தியின் பாவனைகள் தத்ரூபமாக உள்ளன.

இந்த சிலந்தி ஆஸ்திரேலியாவைச் சேர்ந்தது. சன் கிளாஸும் கருப்பு நிறத் தொப்பியும் அணிந்திருப்பதுபோன்ற தோற்றமும், தங்க நிறத்தில் தகதகவென மின்னும் இந்த சிலந்தியின் செயலும் ஜொலிக்கிறது.

ரத்தினக் கற்களை வெட்டும் தொழிலாளியான அட்ரியன் பியர்ஸ் தனது பட்டறையில் கண்ட இந்த அரியக் காட்சியை வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்.

சிறார்கள் மட்டுமன்றி, பெரியவர்களையும் பரவசத்தில் ஆழ்த்துகிறது இந்த சிலந்திப் பூச்சி.