ராஜஸ்தான் மாநிலம் தோல்பூரில் ஆட்டோமொபைல் பொருட்களை ஏற்றி வேகமாக வந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. அப்போது அந்த வழியாகச் சென்ற இரண்டு பைக் மீது லாரி சாய்ந்தது. சிறிது நேரத்தில் லாரியில் இருந்த பொருட்கள் தீ பிடித்து எரிய தொடங்கியது.
விபத்தில் சிக்கி படுகாயமடைந்த பைக் ஓட்டுனர்கள் இரண்டு பேரையும் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி இருவரும் உயிரிழந்தனர்.
விபத்து ஏற்படுத்திய லாரி ஓட்டுநர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்ட்டுள்ளது. இந்த கொடூரமான சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.