தீபாவளியை முன்னிட்டு சென்ட்ரல் – மங்களூரு, எழும்பூா் – திருவனந்தபுரம், திருநெல்வேலி – செங்கல்பட்டு இடையே சிறப்பு விரைவு ரயில்கள் இயக்கப்படவுள்ளன.
இந்த ரயில், திருநெல்வேலியிலிருந்து கோவில்பட்டி, சாத்தூா், விருதுநகா், மதுரை, திண்டுக்கல், மணப்பாறை, திருச்சி, அரியலூா், விருத்தாசலம், விழுப்புரம், மேல்மருவத்தூா் வழியாக செங்கல்பட்டு சென்றடையும். இந்த ரயில்களுக்கான முன்பதிவுகள் அக். 12-ஆம் தேதி காலை 8 முதல் தொடங்கப்படவுள்ளன.
