இன்று (09-03-2025) காலை 5.10 மணி முதல் மாலை 4.10 மணி வரை சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே புறநகர் மின்சார ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. மாலை 4:10 மணி முதல் மின்சார ரயில் சேவைகள் வழக்கம் போல் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தாம்பரம் – கோடம்பாக்கம் – தாம்பரம் இடையே ஒவ்வொரு 30 நிமிடங்களுக்கும் பயணிகள் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்.
சென்னை -கடற்கரை மற்றும் எழும்பூர் இடையேயான 4-வது ரயில் பாதை அமைக்கும் பணி காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மின்சார ரயில்கள் ரத்து காரணமாக போக்குவரத்து கழகம் சார்பில் இன்று சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.
அதன்படி, பிராட்வே – தாம்பரம் இடையே 25 சிறப்பு பேருந்துகளும், பிராட்வே – கிளாம்பாக்கம் இடையே 20 சிறப்பு பேருந்துகளும் பல்லாவரம் – செங்கல்பட்டு இடையே 5 சிறப்பு பேருந்துகள் என மொத்தம் 50 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.