Thursday, December 18, 2025

MIக்கு மட்டும் ‘Special’ கவனிப்பு? CSK நட்சத்திரம் ‘குமுறல்’

ஐந்து IPL கோப்பைகளை வைத்திருக்கும் மும்பை இந்தியன்ஸ் அணி, கடந்த 2020ம் ஆண்டில் இருந்து 6வது கோப்பையை வெல்ல முடியாமல் தவித்து வருகிறது. நடப்பு தொடரில் ஆரம்பத்தில் சொதப்பினாலும், பின்னர் சுதாரித்து Play Off சுற்றுக்கு முன்னேறினர்.

Eliminator போட்டியில் குஜராத்தை டைட்டன்ஸ் அணியை வீழ்த்திய மும்பை, Qualifier 2 போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியிடம் தோல்வியைத் தழுவி, தொடரில் இருந்து வெளியேறியுள்ளது. இதன்மூலம் Knock Out போட்டிகளில் தோல்வியைத் தழுவியதில்லை என்னும், மும்பையின் பெருமையும் முடிவுக்கு வந்துள்ளது.

இந்தநிலையில் சென்னை அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின், மும்பைக்கு மட்டும் எப்போதும் எப்படி IPL தொடரில் Luck அடிக்கிறது? என்று, கேள்வி எழுப்பி இருக்கிறார். இதுகுறித்து அவர், ” மும்பை அணியை பைனலுக்கு வராமல் RCB எப்படியாவது தடுக்க வேண்டும். மும்பைக்கு மட்டும் எப்போதும் அதிர்ஷ்டம் அடிக்கிறது.

எப்படி என்று தெரியவில்லை? கடந்த 2018ம் ஆண்டு நான் பஞ்சாப் அணிக்கு கேப்டனாக இருந்தபோது, லீக் போட்டி ஒன்றில் மும்பை அணி 186 ரன்களைக் குவித்து வென்றது. ஒருகட்டத்தில் அவர்கள் 79 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறினர். அப்போது மின்வெட்டு காரணமாக மைதானத்தின் விளக்குகள் சுமார் 20 நிமிடங்கள் அணைக்கப்பட்டன.

மீண்டும் ஆட்டம் தொடங்கியபோது Pollard களமிறங்கி, அதிரடியாக 53 ரன்களைக் குவித்தார். சில அணிகளுக்கு எப்போதாவது அதிர்ஷ்டம் இருக்கும். ஆனால், மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மட்டும் எப்போதும் அதிர்ஷ்டம் அடிக்கிறது. அது எப்படி என நாம் கண்டுபிடிக்க வேண்டும்,” இவ்வாறு தன்னுடைய குமுறலை வெளிப்படுத்தி இருக்கிறார்.

அஸ்வினின் இந்த பேச்சு சமூக வலைதளங்களில் வைரலாக, இதைப்பார்த்த ரசிகர்கள், ” மும்பை இந்தியன்ஸ்க்கு எப்போதுமே Umpires சப்போர்ட் உண்டு. மும்பை அவுட் கேட்குறதுக்கு முன்னாடியே, Umpires அவுட் குடுத்துருவாங்க. MI மேல அவங்களுக்கு எப்பவுமே பாசம் ஜாஸ்தி,” என்று கிண்டலடித்து வருகின்றனர்.

Related News

Latest News