தாம்பரம் வரை இயக்கப்பட்ட தென் மாவட்ட அரசு பேருந்துகள் இன்று முதல் கிளாம்பாக்கத்துடன் நிறுத்தப்படும் என்று போக்குவரத்து கழகம் அறிவித்து உள்ளது.
கோயம்பேட்டில் இருந்து தென் மாவட்டங்களுக்கு இயக்கப்பட்ட பேருந்துகள், தற்போது கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படுகின்றன. இந்நிலையில், கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக தாம்பரம் வரை இயக்கப்பட்ட தென் மாவட்ட அரசு பேருந்துகள் இன்று முதல் கிளாம்பாக்கத்துடன் நிறுத்தப்படும் என்று போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.