தென் கொரியாவில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் நூலிழையில் மக்கள் சக்தி கட்சி வென்று ஆட்சியை பிடித்தது

350
Advertisement

தென் கொரியாவில் கொரோனா பாதிப்பு உச்சத்தை எட்டியுள்ள நிலையில், அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த தேர்தலில் ஆளும் ஜனநாயக கட்சி வேட்பாளர் லீ ஜே மியுங்குக்கும், மக்கள் சக்தி கட்சியை சேர்ந்த யூன் சுக்கிற்கும் இடையே கடும் போட்டி நிலவியது.வாக்குப்பதிவு முடிவடைந்ததும் வாக்குகள் எண்ணப்பட்டன. மக்கள் சக்தி கட்சியைச் சேர்ந்த யூன் சுக் 48.59 சதவீத வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். ஜனநாயக கட்சி வேட்பாளர் லீ ஜே மியுங் 47.80 சதவீதம் வாக்குகள் பெற்றார்.