டெல்லியில், காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகமான இந்திரா பவனை, அக்கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி திறந்து வைத்தார்.
இந்திய தேசிய காங்கிரஸில் கடந்த 1969-ல் ஏற்பட்ட பிரிவினையால், அக்கட்சியின் தலைமை அலுவலகம் குறித்த பிரச்சினை தீர்க்க முடியாமல் இருந்தது. இந்நிலையில், தில்லி தீன் தயாள் உபாத்யா சாலையில் கடந்த 2009 முதல் கட்டப்பட்டு வந்த காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகமான இந்திரா பவன், சுமார் 15 வருடங்கள் கழித்து தற்போது திறக்கப்பட்டுள்ளது.
இதே சாலையில், கடந்த 2016-ல் இடம் வாங்கிய பாஜக, 2018 ஆம் ஆண்டே தனது கட்சியின் தலைமை அலுவலகத்தை கட்டி முடித்தது குறிப்பிடத்தக்கது. மேலும், கடந்த டிசம்பர் 28 ஆம் தேதியே, காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலக கட்டடம் திறக்க திட்டமிடப்பட்டிருந்த நிலையில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவால் ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில், இன்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தியால் திறக்கப்பட்டுள்ளது.