தாய்க்கு மகனே மறுமணம் செய்து வைத்த நிகழ்வு!

195
Advertisement

தன்னை ஈன்ற தாய்க்கு மகனே மறுமணம் செய்து வைத்த நிகழ்வு தற்போது அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

2013ஆம் ஆண்டு தனது 44வது வயதில் கணவனை இழந்து தனித்து வாழ்ந்து ,

பிள்ளைகளை நன்றாக படிக்க வைத்து வளர்த்துள்ள தனது தாய்க்கு ஒரு வாழ்க்கை துணை வேண்டும் என்று நினைத்த அவரது மகன் இதுகுறித்து தாயிடம் பேசியபோது அவள் மறுத்துள்ளார்.

Advertisement

பின்பு அவரை சமாதான படுத்தி மறுமணம் செய்ய சம்மதிக்க வைத்துள்ளார்.

சில தினங்களுக்கு முன்பு கோலாகலமாக நடந்த தாயின் கல்யாண போட்டோக்களை துபாயில் வேலை செய்யும் அவரது மகன் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டார்.

அந்த பதிவுக்கும் மகன் செய்த நெகிழ்ச்சியான காரியத்திற்கும் பலர் இவர்களை வாழ்த்தி கம்மெண்ட் செய்து வருகிறார்கள்.