ஒரே காற்றாலைமூலம் 20 ஆயிரம் வீடுகளுக்குக்குத்
தேவையான மின்சாரத்தைத் தயாரிக்கும் காற்றாலைக்
கருவியைக் கண்டுபிடித்து சீன நிறுவனம் சாதனை புரிந்துள்ளது.
உலகின் மிகப்பெரிய ராட்ஸதக் காற்றாலையாக இது அமைந்துள்ளது.
242 மீட்டர் உயரமுள்ள இந்தக் காற்றாலை 2023 ஆம் ஆண்டுக்குள்
மின் உற்பத்தியைத் தொடங்கிவிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
46 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில் நிறுவப்படவுள்ள
இந்தக் காலையின் ஓர் இறக்கை 118 மீட்டர் நீளம் கொண்டது.
இது கிட்டத்தட்ட 6 விளையாட்டு மைதானங்களின் மொத்தப்
பரப்பளவுக்கு சமமாகும்.
ஒரு மணி நேரத்தில் 80 ஜிகா வாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும்
ஆற்றல்கொண்டது இந்தக் காற்றாலை. 25 வருடங்கள் இந்தக்
காற்றாலையின் திறன் இந்தக் காலத்தில் ஒன்றரை டன்னுக்கும்
அதிகமான கார்பன் டை ஆக்ஸைடை அழிக்கும் என்கிறது
இந்தக் காற்றாலையைத் தயாரித்த நிறுவனம்.
மிங் யாங் ஸ்மார்ட் எனர்ஜி நிறுவனம் இந்தக் காற்றாலையைத் தயாரித்துள்ளது.
இதிலுள்ள ஓர் இறக்கையின் ஒரு சுழற்சியில் ஒரு வீட்டுக்கு
இரண்டு நாட்களுக்குத் தேவையான மின்சாரம் உற்பத்தியாகிவிடும்
என்கிறது இந்நிறுவனம்.