Friday, August 22, 2025
HTML tutorial

எலும்புகளை வலுவாக்கும் எளிய வாழ்க்கை முறை மாற்றங்கள்

வயதாகும் போது எலும்பு தேய்மானம் ஏற்பட்டு, மூட்டுவலி மற்றும் கால்வலி வருவது வாடிக்கையாகி விடுகிறது. எலும்பு பலவீனம் அடைவதை தவிர்க்க, வாழ்க்கை முறையில் செய்யும் சில எளிய மாற்றங்கள் சிறப்பான பலன்களை தருவது பல ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.

கால்சியம் குறைபாடு, குறைவான உடல் எடை,  சுறுசுறுப்பான உடல் செயல்பாடு இல்லாதது மற்றும் ஒழுங்கற்ற உணவுப்பழக்கம் ஆகிய காரணிகள் எலும்பு தேய்மானத்திற்கு வழி வகுக்கிறது. எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்த கால்சியம் நிறைந்த பால், சிக்கன், மீன், முட்டை, பாதாம், ப்ரொக்கோலி, சோயா போன்ற உணவு பொருட்களை அன்றாட உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

மிதமான வெயிலில் நடந்து எலும்புக்கு மிகவும் தேவையான விட்டமின் D கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.  நடப்பது, ஓடுவது, முறையான உடற்பயிற்சி செய்வது மற்றும் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் படிக்கட்டுகளில் ஏறுவது எலும்புகளை வலுவாக்கும்.

புகை பிடிப்பது மற்றும் மது அருந்துவதை தவிர்த்தால் எலும்பு பாதுகாப்பு கூடுவதோடு பொதுவான ஆரோக்கியமும் மேம்படும் சூழல் அதிகரிப்பதாக மருத்துவர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
HTML tutorial
Latest News