‘வாரிசு’ படத்தில் பாடல் பாடும் சிம்பு! ரசிகர்கள் மகிழ்ச்சி

186
Advertisement

கர்நாடகா பெல்லாரியில் கடைசியாக ஒரு பாடலுடன் வாரிசு படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில், அந்த பாடல் வேகமான beatஉடன் இருப்பதாக சினிமா வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.

இந்நிலையில், அந்த பாடலை சிம்பு பாடியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜயுடனான நட்புக்கு அடையாளமாக சிம்பு இந்த செயலை செய்துள்ளதாக கூறப்படுகிறது.

ரஞ்சிதமே பாடல் 68 மில்லியன் viewsஐ கடந்து தொடர்ந்து ட்ரெண்டிங்கில் முன்னிலை வகித்து வரும் நிலையில் அடுத்த பாடல் விரைவில் வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

அனிருத் ஒரு பாடலை பாடியுள்ளதாக கூறப்பட்டு வந்த நிலையில் அடுத்து அந்த பாடல் வெளியாகுமா, அல்லது சிம்பு பாடியுள்ள பாடல் வெளியாகுமா என ரசிகர்களிடையே எதிர்ப்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.