அகமதாபாத்தின் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற, Qualifier 2 போட்டியில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளது. ரோஹித் சர்மா, ஹர்திக் பாண்டியா, பும்ரா, சாண்ட்னர், சூர்யகுமார் யாதவ், ட்ரெண்ட் போல்ட் என, உலகின் தலைசிறந்த வீரர்களை கொண்ட மும்பையை Uncapped பிளேயர்களை வைத்து ஷ்ரேயாஸ் தோற்கடித்து விட்டார்.
குறிப்பாக பும்ராவின் யார்க்கர்களை ஷ்ரேயாஸ் கையாண்ட விதம், கிரிக்கெட் வட்டாரத்தில் வெகுவாகப் பேசப்படுகிறது. குஜராத்திற்கு எதிரான Eliminator போட்டியில் பும்ராவின் யார்க்கர்கள் தான் மும்பைக்கு வெற்றியைப் பரிசளித்தது. ஆனால் பஞ்சாப்புக்கு எதிரான போட்டியில், பும்ராவால் ஒரு விக்கெட் கூட வீழ்த்த முடியவில்லை.
இந்தநிலையில் 10 வருடங்களுக்கு முன்பாகவே பும்ராவின் யார்க்கர்களை, ஷ்ரேயாஸ் Left Handle டீல் செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 2015ம் ஆண்டு டெல்லி டேர்டெவில்ஸும், மும்பை இந்தியன்ஸும் மோதிய போட்டியொன்றில், பும்ரா யார்க்கர்களாக ஷ்ரேயாஸ்க்கு வீசுவார்.
ஆனால் ஷ்ரேயாஸோ அந்த பந்துகளை அநாயசமாக பவுண்டரிக்கு விரட்டுவார். அதேபோல 10 வருடங்கள் கழித்தும் பும்ராவின் யார்க்கர்களை, ஷ்ரேயாஸ்க்கு பவுண்டரிக்கு விரட்டியுள்ளார். இந்த வீடியோ தற்போது 12 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது. இதைப்பார்த்த ரசிகர்கள், ” தலைவன் பத்து வருஷமாவே, பும்ராவை அசால்ட்டா Handle பண்றாருப்பா” என்று அவருக்கு Fire விட்டு வருகின்றனர். பெங்களூரு – பஞ்சாப் அணிகள் 17 வருடங்களாக கோப்பை வெல்லவில்லை என்பதால், IPL இறுதிப்போட்டி மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எக்கச்சமாக அதிகரித்துக் காணப்படுவது குறிப்பிடத்தக்கது