விஜய்க்கு அவங்க அம்மா வச்ச செல்ல பெயர் இது தான்!

160
Advertisement

‘வாரிசு’ படத்தை வரவேற்க விஜய் ரசிகர்கள் தயாராகி வரும் நிலையில், விஜயை பற்றிய சுவாரஸ்ய தகவல் வெளியாகியுள்ளது.

பிரபல பாடகியும் விஜயின் தாயுமான ஷோபா சந்திரசேகர் அண்மையில் சமையல் தொடர்பான தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று இருந்தார்.

அங்கிருந்து விஜய்க்கு call செய்த ஷோபா, விஜயை ஜோ என அழைத்தார். ஜோசப் விஜய் என்ற விஜயின் முழுப்பெயர், இந்த nicknameக்கு காரணமாக அமைந்து இருக்கலாம்.

மேலும், நிகழ்ச்சியில் சக்கரை பொங்கல் சமைத்த ஷோபா, அது விஜய்க்கு பிடித்தமான உணவுகளில் ஒன்று என குறிப்பிட்டிருந்தார்.

‘ஊர்மிளா ஊர்மிளா’, ‘தொட்ட பெட்டா’ மற்றும் ‘என் உச்சி மண்டைல’ மற்றும் பல விஜயின் சூப்பர்ஹிட் பாடல்களை பாடியுள்ள ஷோபா, விஜயுடன் விளம்பரங்களிலும் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.