பிரபல நடிகையை தாக்கிய அரிய நோய்! வெளியான அதிர்ச்சி வீடியோ

52
Advertisement

‘She Hulk’ தொடரில் நடித்து பிரபலமான ஜமீலா ஜமீல் என்ற பிரிட்டன் நடிகை எலர்ஸ் டான்லொஸ் சின்ரோம் என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.

EDS என்று அழைக்கப்படும் இந்த நோய் சருமம், எலும்புகள், இரத்தக் குழாய்கள், உள் உறுப்புகள் என அனைத்தும் இயங்க துணையாக செயல்படும் திசுக்களை நேரடியாக பாதிக்க கூடியது.

சிலருக்கு லேசான அறிகுறிகளை மட்டுமே தரும் இந்த நோய் கவனிக்காமல் விட்டால் தீவிரமாக மாறி விடும் வாய்ப்புகள் அதிகம். இழுத்தால் நீண்டு கொண்டே வரும் தன் கன்னத்தின் சதையை காட்டி, இது ஒரு app அல்லது filter இல்லை என கூறியுள்ள ஜமீலா, இந்த நோயை பற்றி பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை என்றும் ஒரு விழிப்புணர்வு பதிவாகவே இந்த வீடியோவை பகிர்ந்துள்ளதாக விளக்கம் அளித்துள்ளார்.

Advertisement

மேலும், EDS நோய் பாதித்தவர்களுக்கு பல உணவு ஒவ்வாமைகள் ஏற்படும் எனவும் அதற்கு தயாராக இருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். EDS நோய் தாக்கியவர்களை கிண்டல் செய்யக்கூடிய நபர்களுக்கு, அது போன்ற ஒரு நிலையை சமாளிக்கும் தைரியம் இருக்காது என்றும் கருத்து தெரிவித்துள்ளார்.

https://www.instagram.com/reel/CmrkZ_ehcx-/?utm_source=ig_web_copy_link