சங்கர் ஜிவால் நாளை மறுநாளுடன் ஓய்வு பெற உள்ள நிலையில், அவருக்கு புதிய பொறுப்பானது அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி தீயணைப்பு ஆணையத் தலைவராக டிஜிபி சங்கர் ஜிவால் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழக அரசின் கூடுதல் தலைமை செயலாளர் தீராஜ்குமார் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
சுமார் 35 ஆண்டு கால காவல் துறை அனுபவத்தில் அவர் சிறப்பாக பணி செய்துள்ள சங்கர் ஜிவாலின் அனுபவத்தை பயன்படுத்திக் கொள்ளும் விதமாக இந்த முடிவை தமிழக அரசு எடுத்துள்ளது.