Monday, January 13, 2025

கழிப்பறை சுவரில் பிளம்பருக்குக் கிடைத்த பல கோடி

கழிப்பறைச் சுவரிலுள்ள குழாய்ப் பழுதை நீக்கச்சென்ற பிளம்பருக்கு பல கோடி ரூபாய் கிடைத்துள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அமெரிக்காவிலுள்ள ஹவுஸ்டன் நகரில் தேவாலயம் ஒன்றின் பொதுக் குளியலறை, கழிப்பறைகளில் ஏற்பட்ட பழுதை நீக்கச்சென்றார் ஜஸ்டின் என்ற பிளம்பர். அப்போது குளியலறை, கழிப்பறைச் சுவர்களில் 6 லட்சம் டாலர் மறைத்து வைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாகத் தேவாலய நிர்வாகத்துக்குத் தகவல் கொடுத்தார்.

அவர்கள் காவல்துறைக்குத் தகவல் அளித்தனர். காவல்துறை விசாரணையில் 2014 ஆம் ஆண்டில் கொள்ளைபோன பணம் இது எனத் தெரியவந்தது.

இந்த நிலையில், நேர்மையாக நடந்துகொண்ட பிளம்பருக்கு 20 ஆயிரம் டாலர் வெகுமதியாக அளிக்கப்பட்டுள்ளது.

திரைப்படங்களில் வருவதுபோல உள்ள இந்த சம்பவம் குறித்து தொடர் விசாரணையில் சற்று சுணக்கம் ஏற்பட்டுள்ளது. காரணம், அங்கு கண்காணிப்பு கேமரா எதுவும் இல்லை. இதனால் விசாரணை நடத்துவது கடினம் எனப் போலீசார் தெரிவித்துள்ளனர்.

Latest news