நேற்று இரவு சென்னையிலிருந்து ராமேஸ்வரம் நோக்கி புறப்பட்ட சேது விரைவு ரயில் ராமநாதபுரம் வாலாந்தரவை ரயில்வே கேட் அருகே வந்த போது அப்பகுதியில் இருந்த ரயில்வே கேட் மூடப்படாமல் இருந்துள்ளது. இதை கவனித்த ரயில் இன்ஜின் ஓட்டுநர் ரயிலை நிறுத்தி விட்டு கிழே இறங்கி வந்து கேட்டை மூட சொல்லியுள்ளார். இதையடுத்து கேட் மூடப்பட்டது. பிறகு ரயில் அங்கிருந்து புறப்பட்டு சென்றது.
ரயில்வே கேட் மூடப்படாத குறித்து கேட் கீப்பரிடம் கேட்டபோது தகவல் பரிமாற்றத்தில் ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாக கேட்டை மூடவில்லை என தெரிவித்துள்ளார்.
ரயில்வே கேட் கீப்பரின் அலட்சியத்தால் மூடப்படவில்லை என பொதுமக்கள் தரப்பில் கூறப்படுகிறது. ரயில் எஞ்சின் ஓட்டுனரின் சாதுரியத்தால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.