மின்னல் வேகத்தில் சிறுவர் சிறுமியர் ஸ்கிப்பிங் செய்யும் வீடியோ அனைவரையும் கவர்ந்து வருகிறது.
ஒரே சமயத்தில் இருவர் ஒரு ஸ்கிப்பிங் கயிற்றில் ஸ்கிப்பிங் செய்வதைப் பார்த்திருக்கிறோம். இங்கு நாம் காணும் வீடியோவில் சிறுவர் சிறுமியர் இருவர் ஸ்கிப்பிங் கயிற்றை அசைக்க, அவர்களின் வேகத்துக்கு ஈடுகொடுத்து சிறுவர்களும் சிறுமிகளும் பயிற்சிசெய்கின்றனர்.
எந்திரம்போல செயல்படும் சிறுவர் சிறுமியரின் வேகம் அரங்கிலுள்ள பார்வையாளர்களைப் பரவசப்படுத்துகிறது.
ஸ்கிப்பிங் செய்வது உடல் ஆரோக்கியத்துக்கு ஒரு சிறந்த உடற்பயிற்சி என்றாலும், அதையே சாதனையாகச் செய்வது அரிதான ஒன்று. அந்த வகையில், இரண்டு சிறுமிகள் ஸ்கிப்பிங் கயிற்றை அசைக்க அவர்களின் வேகத்துக்கேற்ப துள்ளிக்குதிப்பது எல்லாரையும் வியப்பில் ஆழ்த்துகிறது.